
தங்காலையில் 600 கிலோ போதைப்பொருள் கண்டுப்பிடிப்புபோலீசார் தகவல்
தங்காலை பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது போதைப்பொருட்களுடன் மீட்கப்பட்ட மூன்று லாரிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளின் மொத்த அளவு தொடர்பில் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 245 கிலோகிராம் ஹெராயின், 380 கிலோகிராம் ஐஸ், 05 பிஸ்டல்கள் மற்றும் ஒரு T-56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தங்காலை சீனிமோதர பகுதியில் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் அடங்கிய லொறி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று காலை அப்பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன, மேலும் லொறி ஒன்று வீடிக்கருகில் நிறுத்தப்பட்டிருந்தது.
சடலங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இதேவேளை இன்று மதியம் தங்காலை பகுதியில் இருந்து 200 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத் இது பற்றி கூறுகையில், லொறி ஒன்றிலிருந்துபோதைப்பொருள் மற்றும்ல் நான்கு நவீன துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

