
முன்னாள் மொரட்டுவ மாநகர சபை மேயருக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மொரட்டுவ மாநகர சபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
மொரட்டுவ மாநகர சபையின் கீழ் வீதி அபிவிருத்தி திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சமன்லால் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

