இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவுமென சபை கருதுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )