
கொழும்பு மாவட்ட இலக்கிய விழாவுடன் இணைந்த ஓவியக் கண்காட்சி
கொழும்பு மாவட்ட இலக்கிய விழாவுடன் இணைந்து நடைபெறும் “சித்தம் – 2025” ஓவியக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் இந்தக் கண்காட்சி அண்மையில் (22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இயற்கையும் நாமும் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், கொழும்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகங்களில் உள்ள பல்வேறு கலாச்சார கலை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களால் படைக்கப்பட்ட ஓவியங்கள் கனிஷ்ட, இடைநிலை, மற்றும் சிரேஷ்ட பிரிவுகளின் கீழ் இடம்பெறும்.
நடுவர் குழு ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் 50 கலைப்படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சுமார் 500 கலைப்படைப்புகளை கண்காட்சிக்காக சமர்ப்பித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறும் கொழும்பு மாவட்ட இலக்கிய விழாவில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

