
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 80-வது ஐ.நா. போது சபை கூட்டம் (UNGA) நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்று பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும். இது அக்டோபர் 7 உட்பட இந்த பயங்கரமான அட்டூழியங்களுக்கான வெகுமதியாக இருக்கும்.
அமைதியை விரும்புபவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மையில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

