முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் சரத் மொஹொட்டி ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பணியகத்தில் பதவியில் இருந்தபோது, ​​பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )