
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்த இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (26) இரவு 10 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட
மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு 2 ஆம் கட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கையும்,
காலி மாவட்டம் – நாகொட, எல்பிட்டிய, பத்தேகம ,யக்கலமுல்ல
களுத்துறை மாவட்டம் : – பாலிந்தநுவர, மத்துகம
மாத்தறை மாவட்டம்: – கொட்டபொல
இரத்தினபுரி மாவட்டம்: – எலபாத , கலவாண, பெல்மதுல்லா
ஆகிய பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது .
CATEGORIES Sri Lanka

