
சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

