
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
நாட்டில், நாளாந்தம் பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று மாத்திரம் வீதி விபத்துக்களால் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலத்சிங்கள, கொலொன்னாவ, லுணுகம்வேஹேர, பொரளை மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளிலேயே இந்த விபத்துக்கள் சம்பவித்துள்ளன.
விபத்துக்களில் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளதாகபொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று அதிகாலை பூகொடை – கொழும்பு பிரதான வீதியின் தொம்பே பகுதியிலும் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

