நீதி அமைச்சரின் தலைமையில் சர்வதேச மொழிபெயர்ப்பு தின நிகழ்வு

நீதி அமைச்சரின் தலைமையில் சர்வதேச மொழிபெயர்ப்பு தின நிகழ்வு

செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசகரம் மொழிகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்றது.

நம்பிக்கையான எதிர்காலம் ஒன்றை கட்டியெழுப்பும் மொழிபெயர்ப்பு என்ற தொனிப் பொருளின் கீழ் சர்வதேச மொழிபெயர்ப்பு தின நிகழ்வு நடைபெற்றதுடன், துறை சார்ந்தவர்களின் கலந்துரையாடல், மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குறுங்கதைகள் போன்றவற்றை வெளியிடுதல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவை பாராட்டுதல் போன்ற நிகழ்வுகளும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட குறுங்கதை சஞ்சிகை நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டதுடன், ஓய்வு பெற்ற சிரேஷ்ட மொழிபெயர்ப்பு நிபுணத்துவ எழுத்தாளர் சூலானந்த சமரநாயக்கவினால் வழங்கப்படும் மொழிபெயர்ப்பு சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )