எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு

எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஒருவரால் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை, எனவும் வீட்டின் ஜன்னல் சேதமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் அப்பகுதியில் போதைப்பொருள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்து எல்பிட்டிய போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )