
The Girlfriend படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
நடிகை ராஷ்மிகா மந்தனா தி கேர்ள்ஃபிரெண்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், The Girlfriend திரைப்படம் வரும் நவம்பர் 7ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
CATEGORIES Cinema

