
முட்டையின் விலையில் வீழ்ச்சி
உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சிவப்பு முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

