பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக ஹோமகம மற்றும் பாலன்வத்த பகுதிகளில் இன்று (09) மற்றும் நாளை (10) 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹோமகம பகுதிக்கு இன்று (09) இரவு 8.00 மணி முதல் நாளை (10) காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இந்த நீர் விநியோகத் தடையால் ஹோமகம நகரம், வக்கந்த வீதி, பிங்கேத்த வீதி, வலுவ வீதி, கெமுனு மாவத்த, அத்துருகிரிய வீதி, கலவிலவத்த, நியந்தகல, மகாக்கட்டுவன, மகம்மன, தெனியா மற்றும் தியாகம பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலன்வத்த மற்றும் அதனைச் சுற்றியுள்ள சித்தாமுல்ல, ஆரவ்வல, நிவந்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தல வீதி, மொரகட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கோரக்கபிட்டிய வீதி, நியந்தகல வீதி (டொலேகடே சந்தி வரை), 255 பஸ் பாதை குடமடுவவிலிருந்து வேல வரை மற்றும் தொடர்புடைய உள் வீதிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (10) காலை 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

இந்நேரத்தில் குடிநீர் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )