காலியில் பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது

காலியில் பேனா வடிவிலான துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கியுடன் காலி, நாகொடை  பகுதியில் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாபலகம பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )