2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் ‘லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை’ ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )