
களனி வெதமுல்லை ஓய்வூதிய இல்ல வளாகத்தில் தேசிய ஓய்வூதிய தினம் 2025 நிகழ்வுகள்
தேசிய ஓய்வூதிய தினம் 2025 கொண்டாட்ட நிகழ்வுகள் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன தலைமையில் அண்மையில் (08) களனி வெதமுல்லை ஓய்வூதிய விடுதி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு தேசிய ஓய்வூதிய தினத்தின் கருப்பொருள் ‘வலுவான, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை’ என்பதாகும்.

மருத்துவ முகாம், இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆயுள் வேத மருத்துவ ஆலோசனை சேவை மற்றும் சிகிச்சைகள், விரிவுரைகள் ஓய்வூதிய வாழ்க்கையில் உற்சாகமாக செயல்படுவதற்கான ஓய்வூதியக் காரர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு மற்றும் வினோத நிகழ்ச்சிகள் பெற இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

