
2025-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு, மரியா கொரினா மச்சாடோவுக்கு ( Maria Corina Machado ) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய அயராத உழைப்பிற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

