
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
2025 ஒக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஒக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 சுற்றுலாப் பயணிகளும், ஒக்டோபர் 8 முதல் 12 வரை 24,266 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை வந்துள்ளதாக SLTDA தரவு காட்டுகிறது.
இந்த காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து 18,299 பேர் வந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து 5,417, சுற்றுலாப் பயணிகளும் இங்கிலாந்திலிருந்து 4,874, சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 3,804 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,954 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

