
தெற்கு கடலில் மீட்கப்பட்ட பொதிகளில் இருந்து மீட்கப்பட்ட 839 கிலோ போதைப்பொருள் !
தெற்கு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில்நேற்று இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பொதிகளில் 670 கிலோகிராம் ஐஸ்,156 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த போதைப்பொருள் தொகுதி ‘உணக்குருவே சாந்தா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அவற்றில் 3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

