
ஹக்மன பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
“தமது இடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படும் 2025 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஹக்மன பிரதேச செயலாளர் பிரிவில் 05 பயனாளிகளுக்கு தலா 10இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற வீடுகளை மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், ஹக்மன பிரதேச செயலாளர் தீக்சன திஸாநாயக்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தறை மாவட்ட முகாமையாளர் ஸ்ரீயானி மல்லிகா, உட்பட அதிகார சபையின் ஏனைய உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

