
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விசேட அறிக்கை ஒன்றை இன்று (17) வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்ககையில், ”2025 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி மதியம் 12.00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES Sri Lanka

