
ஹங்காமவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 1 மில்லியன் வழங்கப்பட்டுள்ளமை விசாரணிகளில் வெளியானது
ஹங்காமாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் , 1 மில்லியன் ரூபாயை வழங்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
ஹங்காமாவைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து ஒரு டி-56 துப்பாக்கி, 63 தோட்டாக்கள், , 12 போர வெடிமருந்துகளை பயன்படுத்தும் 2 ஆயுதங்கள், 25 தோட்டாக்கள், ரிவால்வரின் 34 தோட்டாக்கள், ஒரு டிப்பர் லொறி மற்றும் ஒரு கெப் வாகனம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியே குறித்த சந்தேகநபருக்கு டிப்பர் லொறி மற்றும் கெப் வாகனம் ஆகியவற்றை வழங்கியதாக தெரியவந்துள்ளது.

