
காலியின் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 30 மணி நேர நீர் வெட்டு
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 30 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள், நாளை மறுநாள் (21) பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போபே, பொத்தல, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அஹங்கம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் வழங்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
காலியில் ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்ப்பு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகத் தடையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் வருத்தம் தெரிவிப்பதோடு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சபை கேட்டுக்கொள்கிறது.

