கும்கி 2 படத்தின் டீசர் வெளியானது

கும்கி 2 படத்தின் டீசர் வெளியானது

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தில் பணிபுரிந்துள்ளது.

இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் மதி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கும்கி 2’ படத்தின் டீசர் வெளியானது

இப்படம் நவம்பர் 14ம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )