
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 75,657 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்த வருடத்தின் குறித்த காலப்பகுதி வரையில் மாத்திரம், 1,801,151 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த மாதத்தில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சீனா, பிரித்தானியா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

