
தங்கத்தின் விலையில் மாற்றம்
தங்கம் ஒரு பவுணின் விலை மேலும் 5000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 356,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை குறித்த விலை 360,800 ரூபாவாக இருந்தது.
இந்நிலையில் 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 390,000 ரூபாவாக உள்ளது.
385,000 ரூபாவிலிருந்து 5000 ரூபாவினால் விலை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

