
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், விஸ்கம் பிரபா – 2025 ஆரம்பம்
மேல் மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விஸ்கம் பிரபா – 2025 கண்காட்சி மற்றும் சந்தை நேற்று (21) மேல் மாகாண சபை வளாகத்தின் கீழ் மாடியில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வறுமையை ஒழித்தல் மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் இதன் நோக்கங்களாகும்.
விஸ்கம் பிரபா – 2025, மேல் மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தால் நடத்தப்படும் 29 கிராமப்புற பெண்கள் பயிற்சி மையங்களில் இருந்து சுமார் ஆயிரம் பயிற்சி பெற்ற பெண் தொழில்முனைவோரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2,000 காட்சிப் பொருட்களை கொண்டுள்ளது.
இக் கண்காட்சி ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் நடைபெறும்.
CATEGORIES Sri Lanka

