
காந்தா படத்தின் கண்மணி நீ பாடல் வெளியானது
நடிகர் துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
‘காந்தா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், காந்தா படத்தின் கண்மணி நீ பாடலில் லிரிக்கல் வீடியோ வெளியானது.
CATEGORIES Cinema

