
ரஜரட்ட ரஜினி ரயிலில் தீ விபத்து
அனுராதபுரத்திலிருந்து பெலியதந்தை நோக்கிச் செல்லும் ராஜரட்ட ரஜினி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ரயில்வேதிணைக்களம் தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்குள்ளான ரயிலை மீண்டும் அனுராதபுர ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரயிலில் மற்றொரு இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து செல்லும் ராஜரட்ட ரஜினி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, ரயில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகியதுடன் , காலை 7.30 அளவில் பெலியதந்தைக்கு திரும்ப திட்டமிடப்பட்டது.
CATEGORIES Sri Lanka

