மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியரை தாக்க முயன்ற நபர் : கறுப்புப்பட்டி போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியரை தாக்க முயன்ற நபர் : கறுப்புப்பட்டி போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை அரைமணிநேரம் பணியிலிருந்து விலகி, கருப்புப் பட்டி அணிந்து வைத்தியசாலை முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் இருந்த ஒருவர் வைத்தியசாலை வார்டு வளாகத்துக்குள் நுழைந்து ஒரு ஊழியரைத் தாக்க முயன்ற சம்பவத்தையடுத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நபர் சம்பவத்திற்குப் பிறகு வைத்தியசாலயை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என வைத்தியசாலை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய நபர் மஸ்கெலியா டி-சைட் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை இன்று (25) ஹட்டன் நீதவான் முன் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )