
லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
மஹரகம, நாவின்ன பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சந்தேக நபரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

