வெல்லவாயில் வாகன விபத்து ; பொலிஸ் சர்ஜென்ட் உயிரிழப்பு

வெல்லவாயில் வாகன விபத்து ; பொலிஸ் சர்ஜென்ட் உயிரிழப்பு

வெல்லவாய – தனமல்வில வீதியில் அமைந்த ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற துயரமான வாகன விபத்தில் பொலிஸ் சர்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும், எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.

படுகாயமடைந்த அவர் வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், அங்கு உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் வெல்லவாய, ரஜமாவத்தையைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் சர்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தையொட்டி வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )