வரி செலுத்தாத 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் காலியில் கைப்பற்றப்பட்டது

வரி செலுத்தாத 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள் காலியில் கைப்பற்றப்பட்டது

காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம், காலி பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது வரி செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலி பகுதியில் நடத்தப்பட்ட “முழு நாடும் ஒன்றாக ” நடவடிக்கையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

95 மூடைகளில் இருந்த சுமார் 19,000 சிகரெட்டுகள் கைப்பற்றபட்டதாகவும் , அதன் மதிப்பு சுமார் 2 மில்லியன் ரூபாய் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொத்தல மற்றும் மிலிட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )