
யட்டியந்தோட்டையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி
யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

