யாழில் 17 வயது சிறுவனை காணவில்லை

யாழில் 17 வயது சிறுவனை காணவில்லை

யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ச. சயோசியன் காணாமல் போயுள்ளதாக, அவரது தந்தை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தகவலின்படி, குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை (31) வீடைவிட்டு வெளியேறியதுடன், இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிறுவன் குறித்த தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அவரது பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தினரை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )