பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் பிறரை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா கோயிலின் திருகோணமலை கல்யாணவன்ச தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )