
மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் ; சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று (02) நவி மும்பையில் நடைபெற்றது.
இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
CATEGORIES Sports News

