
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்
ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா இன்று (22), தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது” என தெரிவித்துள்ளது.
CATEGORIES World News

