
இலங்கை வந்தடைந்த வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
புனிதப் பேராயரின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.

நாட்டிற்கு வந்த பேராயர் கல்லாகரை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமசந்திரா வரவேற்றார்.

இலங்கைக்கும், திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறித்து, கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ள சிறப்பு நினைவு நிகழ்வில் பேராயர் கல்லாகர் உரை நிகழ்த்தவுள்ளார்.

