
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு
போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 46 வயதான தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆவார்.
CATEGORIES Sri Lanka

