
கிங் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு கிங் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
CATEGORIES Cinema

