
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ்,
சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை 8,66,596 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.

