பெத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் திகதி அறிவிப்பு

பெத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் திகதி அறிவிப்பு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.

அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், முதலில் வருகிற மார்ச் 27-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த படம் வருகிற ஏப்ரல் 30-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘பெத்தி’ படத்தின் 2வது பாடல் வரும் மார்ச் 2ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )