
நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார்
எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச. இன்று தெரிவித்தார்.
நுகேகொடை அரசியல் பேரணி தொடர்பில் ஊடகங்களுக்கு நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.
“ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்படுகிறது .
பேரணியில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம்.
நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார். எனினும், அவரது ஆசிர்வாதம் நிச்சயம் உண்டு .
முன்னர் மக்களுக்காக களத்தில் இறங்கி போராடிய தலைவர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டலுடன் எமது பயணம் தொடரும்.
நுகேகொடை அரசியல் பேரணி அரசாங்கத்துக்கு நிச்சயம் கடுமை அழுத்தமாக அமையும்.” எனவும் நாமல் ராஜபக்ச இன்றைய ஊடக சந்திப்பில் கூறினார்.

