பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியமஹிந்தானந்த அளுத்கமகே – நளின் பெர்ணான்டோ மனு நிராகரிப்பு

பிணையில் விடுதலை செய்யுமாறு கோரியமஹிந்தானந்த அளுத்கமகே – நளின் பெர்ணான்டோ மனு நிராகரிப்பு

தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிய
மஹிந்தானந்த அளுத்கமகே – நளின் பெர்ணான்டோ ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோர் பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது .

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் 14,000 கெரம் போர்டுகள் மற்றும் 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்து விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத் கமகே ஆகியோருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத் கமகேவுக்கு 20 வருடக்கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )