அரச சேவைக்கு 75,000 பேர் ஆட்சேர்ப்பு

அரச சேவைக்கு 75,000 பேர் ஆட்சேர்ப்பு

75,000 பேரை அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு உரிய முறைமையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக அரச சேவை வெற்றிடங்களுக்கு முறையான விதத்தில் ஆட்சேர்ப்புச் செய்யப்படாமையினால், அரச சேவை பொறிமுறை முழுவதுமாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதனால், பிரதமரின் தலைமையில் தாபிக்கப்பட்டுள்ள அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பதவியணி முகாமைக்கான குழுவினூடாக மேற்கொள்ளப்பட்ட முறையான ஆய்வின் பின்னர்
சுமார் 75,000 பேரை உரிய முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய அரச சேவையை முன்னெடுத்துச் செல்வதற்காக இருக்க வேண்டிய தொழில்நுட்ப, சட்ட அமுலாக்கல், வருவாய் அதிகாரிகள் போன்ற பதவிகள் இதில் அடங்கும்.

அதே போன்று, இனிவரும் காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புகள், பதவியுயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரசியல் தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்வதன் மூலம், இளைஞர், யுவதிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )