கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கையில் நேற்று (7) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சொகுசு காரில் வந்த குழுவொன்று பாதிக்கப்பட்டவரை துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனி ரெமோஷன் தரப்புக்கும் கண்ணா தரப்புக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் எனவும், சம்பவத்தில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் கொட்டாஞ்சேனைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )