2023இல்  முதன்முறையாகஅஸ்வெசும பதிவு செய்தவர்கள் தகவல்களை புதுபிக்குமாறு அறிவிப்பு

2023இல் முதன்முறையாகஅஸ்வெசும பதிவு செய்தவர்கள் தகவல்களை புதுபிக்குமாறு அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களை பதிவு செய்யும் வருடாந்திர தகவல் புதுப்பிப்புகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் அஸ்வெசும பதிவுசெய்து தற்போது சலுகைகளைப் பெற்று வருபவர்களும், பெறாதவர்களும் இந்தப் புதுப்பிப்புகளைச் செய்ய வேண்டும் என சபை தெரிவித்துள்ளது.

இந்த புதுப்பிப்பில் பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும சலுகைக்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என சபை தெரிவித்துள்ளது .

இதேவேளை 2024 ஆம் ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளை தாக்கல் செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை என சபை தெரிவித்துள்ளது,
ஏனெனில் இந்த விண்ணப்பதாரர்களின் விபரங்கள் ஏற்கனவே சரிபார்ப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும் மீண்டும் தகவல்களை சரி பார்க்கும்போது குடும்ப உறுப்பினர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் மொபைல் தொலைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியம் எனவும் சபை தெரிவித்துள்ளது.

இதனைப்படையில் ஒன்லைன் மூலமாக கணினி அல்லது ஸ்மார்ட்போனிலிருந்து https://eservices.wbb.gov.lk என்ற
இணைய மு,கவரியை அணுகி, QR பாத்திரத்தில் உள்ள தமது HH எண் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தகவல் அமைப்பை அணுகி தகவல் சரிபார்ப்பு மெனுவிற்குச் செல்வதன் மூலம் குடும்பத் தகவலை உள்ளிடலாம் என சபை தெரிவித்துள்ளது.

இல்லையெனில், பிரதேச செயலகத்திலுள்ள நலன்புரி சலுகைகள் தகவல் பிரிவை அணுகி
அல்லது தமது பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம அலுவலரின் ஊடாக வருடாந்த தகவல் புதுப்பிப்பு விண்ணப்பத்தை சமர்பிக்கமுடியுமென சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பிப்பில் பங்கேற்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )