
ஊவா மாகாணம் , அம்பாறை, மட்டக்களப்பு , ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை
பலத்த மின்னல் குறித்து வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு , ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இப்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம்தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலால் ஏற்படும் எனவும் இந்த ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka

